விருதுநகர்

சாத்தூரில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி

DIN

சாத்தூர் பகுதியில் அரசு ஆரம்ப நலவாழ்வு மையம் மற்றும் பள்ளிகளில்  ஊட்டசத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது.
சாத்தூர் அருகே நடுச்சூரங்குடி அரசு ஆரம்ப நல வாழ்வு மையத்தில் திங்கள்கிழமை ஊட்டச்சத்து மாத விழா  குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் 30-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். இதில் குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிப்பது குறித்து எடுத்துரைக்கபட்டது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு உடல் பரிசோதனைகளும் நடைபெற்றது.
இதேபோன்று செவ்வாய்க்கிழமை சாத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மேல்நிலைபள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊட்டசத்து  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  புதன்கிழமை வெங்கடாசலபுரத்தில் உள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் ஊட்டச்சத்து விழா நடைபெற்றது. இதில் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு ஊட்டசத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் ஊட்டசத்து உணவுகளும் வழங்கப்பட்டன. இதையடுத்து வியாழக்கிழமை ராமலிங்காபுரத்தில் நூறு நாள் வேலைத்திட்டப் பணியில் உள்ள பெண்களிடம் குழந்தைகளின் நலன் குறித்தும், ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும் எடுத்தரைக்கபட்டது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT