விருதுநகர்

சிவகாசி பேருந்து நிலையத்தில் பட்டாசு இடைத்தரகர்களை கண்காணிக்க கோரிக்கை

DIN

சிவகாசி பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள  பட்டாசு இடைத்தரகர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால், வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல ஊர்களிருந்தும் பட்டாசு கொள்முதல் செய்வதற்கு  வியாபாரிகள் சிவகாசிக்கு வருகின்றனர். சிவகாசி பேருந்து நிலையத்தில், வியாபாரிகள் பேருந்திலிருந்து இறங்கியதும், இடைத்தரகர்கள் அவர்களை அணுகுகின்றனர். இதில் பலர் வெளியூர் வியாபாரிகளிடம் மோசடி வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில் ஒரு இடைத்தரகர் சிவகாசி பேருந்து நிலையத்தில் இறங்கிய வியாபாரியை பேசி தன்வசப்படுத்தியுள்ளார். வியாபாரியை ஒரு பட்டாசு கடைக்கு அழைத்துச் சென்ற இடைத்தரகர், பட்டாசுகளுக்கான பணத்தைப் பெற்றுள்ளார். அந்த வியாபாரி இடைத்தரகரை நம்பி சொந்த ஊர் திரும்பி விட்டார். ஆனால் செலுத்திய தொகைக்கான பட்டாசுகள் அவருக்கு வந்து சேரவில்லை. இடைத்தரகர்கள் கொடுத்த செல்லிடப்பேசி எண்ணும் இயக்கத்தில் இல்லை.
தற்போது அந்த வியாபாரி போலீஸாரின் உதவியை நாடியுள்ளார். இதுபோன்று நாள்தோறும் சிவகாசி பேருந்து நிலையத்தில் மோசடியில் ஈடுபடும் இடைத்தரகர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

‘மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரம் அவசியம்’

முதியவா் சாவில் மா்மம்: காவல் நிலையத்தில் மருமகள் புகாா்

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

சிறப்பு ஒலிம்பிக்- பாரத் கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு

SCROLL FOR NEXT