விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே சாலையோரம் பட்டுப்போன மரங்களை அகற்றக் கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை அருகே சாலையோரம் பட்டுப்போன மரங்களை அகற்ற   சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அருப்புக்கோட்டை வட்டாரத்திற்குள்பட்ட கோபாலபுரம் பிரதான சாலை, கோவிலாங்குளம் சாலை, அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் செல்லும் சாலை, வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்புறம், அருப்புக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற சாலை, ராமலிங்காநகரில் உள்ள திருச்சுழி செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கியச் சாலைகளிலும் பல டன் எடைகொண்ட பெரிய மரங்கள் பட்டுப் போய் காணப்படுகின்றன. மரப்பட்டைகள் உரிந்து அடிவாரம் இற்றுப்போன நிலையில் காணப்படும் இந்த மரங்கள் பலத்த காற்று அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாலையில் செல்லும் வாகனங்கள் மீது முறிந்துவிழும் அபாய சூழல் உள்ளது. 
இதுகுறித்து இப்பகுதி ஊராட்சியில் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் இச்சாலைகளில் பள்ளி வாகனங்களும் செல்வதால் விபத்து ஏற்படும் முன்னர் மரங்களை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT