விருதுநகர்

இலங்கிப்பட்டியில் சேதமடைந்து பயன்பாட்டில் இல்லாத நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றக் கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை அருகே உள்ள இலங்கிப்பட்டியில் சேதமடைந்து பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதால் அத்தொடியை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 
அருப்புக்கோட்டை அருகே உள்ள இலங்கிப்பட்டி கிராமத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிரதான வீதியில் பழைய, பயன்பாடின்றிக் கைவிடப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. சேதமடைந்த இத் தொட்டிக்குப் பதிலாகப் புதிய 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த் தேக்கத் தொட்டி ஊரின் மேற்கே கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களாகப் பயன்பாட்டில்  உள்ளது. இந்நிலையில் கைவிடப்பட்ட பழைய நீர்த் தேக்கத் தொட்டி மூன்று வருடங்களாகியும் அகற்றப்படாத நிலையில் உள்ளது. 
அதன் அருகே பள்ளி மாணவர்கள் பலரும் காலை, மாலை வேளைகளில் விளையாடி வருகின்றனர். பொதுமக்களும் இத்தொட்டியின் கீழுள்ள பழைய குழாயடியில் வரிசையில் நின்று குடிநீர் பிடிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் அதிக வாகனப்  போக்குவரத்தும் காணப்படுகிறது. எனவே இங்குள்ள சேதமடைந்த பழைய நீர்த் தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளதால் அதை விரைந்து அகற்றவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT