விருதுநகர்

பருவமழை: பாலவநத்தம் பகுதியில் உழவுப் பணியில் விவசாயிகள் தீவிரம்

DIN

விருதுநகர் அருகே பாலவநத்தம் பகுதியில் தற்போது பெய்த பருவமழை காரணமாக, உழவுப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக பருவமழை பெய்துவந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குறிப்பாக, விருதுநகருக்கு கிழக்கே உள்ள காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகள் வானம்பார்த்த பூமி என்பதால், இப்பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்யமுடியும். இந்நிலையில், இப்பகுதிகளில் கடலை விவசாயம் செய்வதற்காக விவசாயிகள் உழவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
அதேபோல், பாலவநத்தம் மெட்டுக்குண்டு, மலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சோளப் பயிர் விளைவிப்பதற்காக உழவு பணிகளில் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, வெளிச் சந்தையில் உரம் அதிகளவு விற்பனையாகி வருகிறது. 
இது குறித்து பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துச்சாமி கூறியது: 
எங்கள் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் கரிசல் மண்ணாகும். இந்தப் பகுதியில் சிவப்பு சோளம் பயிரிட்டால், ஓரளவுக்கு பலன் கிடைக்கும். வானம்பார்த்த பூமி என்பதால், மழையை நம்பி உழவுப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, உரங்கள் கடைகளில் இருப்பு இல்லாததால், விருதுநகர், அருப்புக்கோட்டை போன்ற நகரங்களுக்குச் சென்று வாங்கி வரவேண்டியிருக்கிறது. இதனால், கூடுதல் செலவு ஏற்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT