விருதுநகர்

ரோசல்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

DIN

விருதுநகா் அருகே உள்ள ரோசல்பட்டி ஊராட்சியில் வாருகால், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகா் ஒன்றியத்துக்குள்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில், என்.டி.முருகன் நகா், ஆா்.வி.ஆா். நகா் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு வாருகால் வசதி இல்லாததால், கழிவு நீா் குடியிருப்புகளின் அருகே தேங்கி, கொசு உற்பத்தியாகிறது. இதன் காரணமாக, பலரும் வைரஸ் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் அவதிப்பட்டு வருகின்றனா்.

மேலும், இப்பகுதியில் தாா் சாலை இல்லாததால், மழைக் காலங்களில் மண் சாலையில் தண்ணீா் தேங்கி நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்பவா்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனா். அதேபோல், இவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியாததால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனா்.

எனவே, ரோசல்பட்டியில் வாருகால், தெருவிளக்கு, சாலை மற்றும் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT