விருதுநகர்

விருதுநகரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றக் கோரி புகார் மனு

DIN

விருதுநகர் நகராட்சிக்கு உள்பட்ட 21 ஆவது வார்டு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
   அந்த மனுவில் கூறியிருப்பதாவது, விருதுநகர் நகராட்சி 21 ஆவது வார்டு பகுதியில் சுமார் 400- க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிவன் கோயில் தெருவில், வாருகாலில் அதிகளவு மண் தேங்கியுள்ளது. இதனால், வாருகாலில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி விடுகிறது. இவற்றை, சீரமைக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மேலும், ஏற்கெனவே, இருந்த குப்பைத் தொட்டியை நகராட்சி அதிகாரிகள் அகற்றி விட்டனர். இதனால், வார்டு முழுவதும் குப்பைகள் தேங்கி உள்ளன. இரவு நேரங்களில் தெரு விளக்குகளும் எரிவதில்லை.  அதேபோல், விருதுநகர் மக்களவை உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு, 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பெண்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். எனவே, எங்களது வார்டு பகுதியில் அடிப் படை வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT