முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் புதிய சாலை அமைக்கக் கோரிக்கை

அருப்புக்கோட்டை நகரில் பள்ளிகளை இணைக்கும் பிரதானச் சாலையை சீரமைக்க சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Updated On : 25 பிப்ரவரி 2019, 7:27 am IST
பகிர்:

அருப்புக்கோட்டை நகரில் பள்ளிகளை இணைக்கும் பிரதானச் சாலையை சீரமைக்க சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அருப்புக்கோட்டையிலுள்ள வர்த்தகர் சங்கச் சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு  அமைக்கப்பட்டது. தற்போது, இந்த சிமென்ட் சாலை உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையில் 2 மேல்நிலைப் பள்ளிகள், ஒரு தொடக்கப் பள்ளி, ஒரு நடுநிலைப் பள்ளி மற்றும் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகின்றன. இதனால், இச்சாலையில் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவியர் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களும் விபத்தை சந்திக்கின்றனர். எனவே, குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையை புதிதாக அமைக்க வேண்டும் எனசமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.