விருதுநகர்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு: ஓவியப் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா

DIN

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 விருதுநகர்  மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கம் "பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள்" என்ற தலைப்பில் மாவட்ட அளவில் ஓவியப் போட்டி நடத்தியது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர், மகாத்மா வித்யாலயா பள்ளியின் 5 ஆம்  வகுப்பு மாணவர் கே.நித்திஸ் மற்றும் யுகேஜி மாணவி வி.ஐஸ்வர்ய சக்தி  ஆகியோர் மாவட்ட அளவில்  முதலிடத்தையும்,  இரண்டாம் வகுப்பு மாணவி எஸ்.சஹானா இரண்டாமிடத்தையும் பெற்றனர். 
இதனைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஜி.எஸ்.முருகேசன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் எம்.ராணி முன்னிலை வகித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT