விருதுநகர்

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வனப் பேச்சியம்மன் கோயில் திருவிழா

DIN

ராஜபாளையம் அருகேயுள்ள வனப் பேச்சியம்மன் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம்  தேவதானத்தை அடுத்துள்ள சாஸ்தா கோயில் வனப் பகுதியை ஒட்டி வனப் பேச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் இக்கோயில் திருவிழா, கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது நடைபெற்றது.   
திருவிழாவில், முகவூர் கிராமத்தில் உள்ள 18 சமுதாயங்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதில், வனப் பேச்சியம்மன் மற்றும் காவல் தெய்வங்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தங்கும் வசதிக்காக 100-க்கும் மேற்பட்ட தற்காலிக பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளை, வனத் துறையினர் மற்றும் சேத்தூர் காவல் துறையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT