விருதுநகர்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கு

DIN

ராஜபாளையத்தில் துளி தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், கடந்த ஆண்டு விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் செய்யப்பட்ட பணிகள் குறித்தும், கண்மாய் நீரை அதிகமாக உறிஞ்சும் ஆகாயத் தாமரை செடிகளை முழுவதுமாக அழிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.
பின்னர், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்தல், காற்று மாசுபடுதலை தடுக்க மரம் வளர்த்தல், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல், விவசாயம் ஆகியவற்றின் அவசியம் குறித்து பல்வேறு தலைப்புகளில் சிறப்பு விருந்தினர்கள் பேசினர். 
மேலும், முடிந்த அளவு  சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT