சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டி.மீனாட்சிபுரம் கிராமத்தின்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டி.மீனாட்சிபுரம் கிராமத்தின் எல்லைப் பகுதியிலிருந்து கிராமத்தை நோக்கிச் செல்லும் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளச் சாலையானது ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு மிகக்குறுகலாக உள்ளது. அருகிலுள்ள திருவிருந்தாள்புரம் மற்றும் சுக்கில நத்தம் ஆகிய இருவேறு திசைகளிலுள்ள கிராமங்களிலிருந்து இக்கிராமத்தை இணைக்கும் இரண்டு சாலைகளுமே இவ்விதம் மிகக்குறுகலானதாக இருப்பதால் இக்கிராமத்திற்குப் பேருந்து உள்ளிட்ட பிற நான்கு சக்கர கனரக வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையறிந்து இச்சாலையை அகலப்படுத்த இக்கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தபோதும் ஊராட்சித் தரப்பு மெத்தனம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே திருவிருந்தாள்புரம்-டி.மீனாட்சிபுரம்-சுக்கிலநத்தம் ஆகிய கிராமங்களை இணைக்கும் சாலையை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.