விருதுநகர்

விருதுநகரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

DIN

விருதுநகரில் தொடர் குற்றசெயலில் ஈடுபட்டு வந்த ஒருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் பாண்டி மகன் மணிகண்டன் (35). இவர் மீது, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. இந்நிலையில், கடந்த சில 
தினங்களுக்கு முன்பு நண்பர்களுடன் மணிகண்டன் குற்றாலம் சென்றிருந்தபோது, அங்குள்ள போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 
பின்னர் குற்றாலம் போலீஸார், விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் மணிகண்டனை அழைத்து வந்து, விருதுநகர் சிறையில் அடைத்தனர். 
இந்த நிலையில், இவர் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால்,  குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது 
செய்ய மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்திற்கு, காவல் கண்காணிப்பாளர் மு. ராஜராஜன் பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து, ஆட்சியர் உத்தரவின்பேரில் வியாழக்கிழமை மணிகண்டனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாண்டியன் நகர் போலீஸார் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT