விருதுநகர்

காமராஜபுரத்தில் குளியல் தொட்டி மின் மோட்டாரை பழுது நீக்க வலியுறுத்தல்

DIN


விருதுநகர் அருகே காமராஜபுரத்தில் குளியல் தொட்டிக்கான மின் மோட்டாரை பழுது நீக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 விருதுநகர், ஆர்.ஆர். நகர் அருகே காமராஜபுரத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் பட்டாசு ஆலை மற்றும் கூலி தொழில் செய்து வருகின்றனர். ஏற்கெனவே, இக்கிராமத்தில் வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இத்தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்பதால், வாகனங்களில் விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடம் ரூ. 12-க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும், தெரு விளக்குகள் பராமரிக்கப்படாததால் அவை எரிவதில்லை. இதனால், இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் வெளியில் வர அச்சப்படுகின்றனர். இந்நிலையில், இங்குள்ள குளியல் தொட்டியை ஆண்கள், சிறுவர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள மின் மோட்டார் பழுதானதால் குளியல் தொட்டியை பயன்படுத்த முடிய வில்லை.
 இதன் காரணமாக குளியல் தொட்டி உள்ள பகுதி பாழடைந்து, சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. 
எனவே, மின் மோட்டாரை சரி செய்து குளியல் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT