விருதுநகர்

சுப்பிரமணியபுரம் கிராமத்தில் சேதமடைந்த கட்டடத்தை அகற்றக் கோரிக்கை

DIN

சாத்தூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள வேளாண் பயிற்சி மைய கட்டடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சுப்பிரமணியாபுரம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில், வேளாண் பயிற்சி மைய கட்டடம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.  கடந்த 10 ஆண்டுகளாக இந்த கட்டடத்தை பயன்படுத்தாமல், சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது. குடியிருப்புப் பகுதியில் இந்தக் கட்டடம் அமைந்துள்ளதால், இப்பகுதியை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆபத்தை உணராமல் இப்பகுதியைச் சேர்ந்த சிலர் சேதமடைந்த கட்டடத்தில்,  விறகுகளை அடுக்கி வைத்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் இக்கட்டடத்தில்  சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாகவும் இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே இக்கட்டடத்தை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT