விருதுநகர்

சுக்கிலநத்தம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்களை சீரமைக்கக் கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை வட்டம் சுக்கிலநத்தம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்கள் சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த அந்த தூண்களை விரைவில் சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  சுக்கிலநத்தம் கிராமத்தில் குடிநீர் விநியோகத்திற்காக கடந்த 2010-11 ஆம் நிதியாண்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் உரிய பராமரிப்பில்லாததால் இத்தொட்டியின் கான்கிரீட் தூண்கள் சேதமடைந்து அதன் உள்ளிருக்கும் கட்டுமானக் கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகின்றன.  எனவே தூண்கள் பலமின்றி இருப்பதால் இத்தொட்டியும் உடைந்துவிழ வாய்ப்புள்ளது எனப் பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இத்தொட்டி கிராமத்தின் பேருந்து நிறுத்தத்துக்கு மிக அருகில் இருப்பதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளும் அச்சப்படும் சூழல் நிலவுகிறது. எனவே இத்தொட்டியைத் தாங்கி நிற்கும் சேதமடைந்த தூண்களை விரைவில் சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT