விருதுநகர்

"அருப்புக்கோட்டையில் விரைவில் சீரான குடிநீர் விநியோகம்'

DIN

அருப்புக்கோட்டை நகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் வழங்கும் விதமாக புதிய பகிர்மானக்குழாய் அமைக்க நகராட்சிப் பொறியாளர்களுடன் எம்எல்ஏ  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு தாமிரவருணிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் சுமார் 20 முதல் 25 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. ஆனால் நகராட்சிக்கு ஒட்டு மொத்தமாக சுமார் 80 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை உள்ளது. இதனால் கிடைக்கும் நீரைக்கொண்டு சுழற்சி முறையில் பகுதி வாரியாக 15 அல்லது 20 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனிடையே நகரின் சில மேடான பகுதிகளுக்கு வழக்கமான நீர் கிடைக்கவில்லை எனத் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.
எனவே அனைத்துப்பகுதிகளுக்கும் சீராகக் குடிநீர் வழங்கும் பொருட்டு புதிய பகிர்மானக் குழாய்களைஅமைக்கும் பணிக்காக, நகராட்சி அதிகாரிகளுடன் குழாய் பதிக்க உள்ள இடங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். 
இதுகுறித்து அவர் கூறியது: நகரின் மேடான பகுதிகளான தெற்குத்தெரு, ராமலிங்கா நகர், திருநகரம் ஆகிய பகுதிகளுக்குத் தனியாக, மாற்று வழித்தடத்தில் நேரடியாகத் தனித்துக்  குடிநீர் வழங்கும் விதமாகத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.  இதன்படி அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையம் பின்புறம்  உள்ள குடிநீர்த்தொட்டியிலிருந்து புதிய பகிர்மானக்குழாய்கள் அமைக்க, நகராட்சி பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டோம். எனவே விரைவில் மேடான பகுதிகளுக்கும் தடையில்லாமல் சீராகக் குடிநீர் கிடைக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT