விருதுநகர்

தேர்தல் பறக்கும்படை சோதனையில் 36 புகையிலை மூட்டைகள் சிக்கின

DIN

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை வாகனச் சோதனையில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்கள் சிக்கின.
 சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி மாரிமுத்து மற்றும் போலீஸார் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். வாகனத்தில் 36 மூட்டைகள் இருந்தன.
அவற்றில் என்ன உள்ளது என வாகன ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமாரிடம் (35) கேட்டபோது,  சேலத்திலிருந்து-தூத்துக்குடிக்கு சேலைகளை கொண்டு செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
 ஆனால் சந்தேகத்தின் பேரில் வாகனத்தில் இருந்த மூட்டைகளை போலீஸார் பிரித்து சோதனையிட்டனர்.  அப்போது அவை தடைசெய்யபட்ட புகையிலை பொருள்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை மூட்டைகளுடன் வாகனத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள், சரக்கு வாகனத்தை, சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சுரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலை மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT