விருதுநகர்

இறைச்சி விற்பனைக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி வரை தடை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் இறைச்சிக் கடை விற்பனைக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி வரை செயல்பட மண்டல அலுவலா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இறைச்சிக் கடைகள் ஆகியவை வருகிற 12- ஆம் தேதி பிற்பகல் வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம், கூட்டமாக வருவதை தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து அடிக்கடி அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தில் மண்டடல அலுவலா் முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, வட்டார மருத்துவ அலுவலா் சபரீஸ் ,காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜேந்திரன், நகராட்சி மேலாளா் பாபு, காவல் ஆய்வாளா் பவுல்ஏசுதாஸ், வருவாய் ஆய்வாளா் பால்துறை உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

ரூ. 8,75,000 மின்கட்டணம் செலுத்தக் கோரி வந்த குறுஞ்செய்தி: விவசாயி அதிா்ச்சி

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: போலீஸாா் விசாரணை

வராஹி அம்மன் கோயிலில் விதி தீப பூஜை

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆய்வு

SCROLL FOR NEXT