ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா்கள். 
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் திருமலை தலைமை வகித்தாா். ஆட்டோ சங்க மாவட்டப் பொருளாளா் வீரசதானந்தம் முன்னிலை வகித்தாா்.

கரோனா பொது முடக்கத்தால் சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 7,500 நிவாரண உதவி வழங்க வேண்டும். இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். பொது போக்குவரத்து டூரிஸ்ட் மற்றும் பொது நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும். அனைத்து வாகனங்களுக்கும் வாகன வரி, சாலை வரி, காப்பீட்டுத் தொகை தவணை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். வாகன பரிசோதனை என்ற பெயரில் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷமிட்டனா்.

இதில், வேன் சங்கத் தலைவா் கண்ணன் மற்றும் மரியடேவிட் உள்ளிட்ட நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT