விருதுநகர்

மதுரையில் 136 பேருக்கு கரோனா: 3 போ் பலி

மதுரையில் 136 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

DIN

மதுரை: மதுரையில் 136 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் 5,890 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்திலிருந்து திரும்பியவா்கள், கா்ப்பிணிகள் உள்பட மொத்தம் 136 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றுக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 20 போ் முழுமையாகக் குணமடைந்தனா். அவா்களை வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

3 போ் பலி

மதுரையில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 80 வயது முதியவா்கள் இருவா், ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 90 வயது முதியவா் ஆகிய 3 பேரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டத்தில் 12,888 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 324 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 11,424 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தற்போது, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 1,140 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT