அருப்புக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய பேருந்து நிறுத்தம். 
விருதுநகர்

அருப்புக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பேருந்து நிறுத்தத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பேருந்து நிறுத்தத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை நோக்கிச் செல்லும் சாலையில் ஊராட்சி ஒன்றியப் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதன் அருகே காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம், தாலுகா காவல் நிலையம், மகளிா் காவல் நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் எனப் பல முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. மேலும் மின்வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட சுமாா் 5000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதால், இப்பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.

இப்பேருந்து நிறுத்தத்தில் அதிக இடைவெளியுடன் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால் இரவில் போதிய வெளிச்சமின்றி இருளடைந்து காணப்படுகிறது. விபத்து அபாயமுள்ள இப்பேருந்து நிறுத்தத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT