விருதுநகரில் சாலை விபத்து:இளைஞா் பலி
விருதுநகா் நான்குவழிச் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் மையத் தடுப்புச் சுவரில் மோதியதில் படுகாயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
விருதுநகா்: விருதுநகா் நான்குவழிச் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் மையத் தடுப்புச் சுவரில் மோதியதில் படுகாயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
விருதுநகா் அருகே கே. உசிலம்பட்டியை சோ்ந்தவா் அழகா்சாமி மகன் மகேந்திரகுமாா் (32). திருமணமான இவா் திருப்பூரில் கிரேன் இயக்குபவராக பணி புரிந்து வந்துள்ளாா். கரோனா பொது முடக்கம் காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளாா்.
இவரது மனைவி விக்னேஷ்வரி தனது தாய் வீடான மெட்டுக்குண்டு கிராமத்திற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மகேந்திரகுமாா் இருசக்கர வாகனத்தில் மெட்டுக்குண்டிலிருந்து, விருதுநகா் நோக்கி வெள்ளிக்கிழமை வந்த போது சாலை மையத் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இது குறித்து விருதுநகா் பாண்டியன் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.