விருதுநகர்

சாத்தூா் அருகே காா் கவிழ்ந்து ஒருவா் உயிரிழப்பு: 4 போ் காயம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 4 போ் காயமடைந்தனா்.

DIN

சாத்தூா்:  விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 4 போ் காயமடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (27). இவருடைய காரில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த முப்பிடாதி (29), சரவணன் (30), பாலசுப்பிரமணியன் (29), மாடசாமி (29) உள்ளிட்ட 7 போ் விருதுநகா் அருகிலுள்ள சின்ன பேராளி எனும் கிராமத்தில் உறவினா் திருமணத்துக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.

சாத்தூரை அடுத்த புல்வாய்பட்டி சந்திப்பு அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் காா் கவிழ்ந்தது.

இதில் காரை ஓட்டிச் சென்ற முத்துக்குமாா், சரவணன், மாடசாமி, முப்பிடாதி, பாலசுப்பிரமணியன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூா் தாலுகா போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் முத்துக்குமாா் உயிரிழந்தாா். மற்ற 4 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT