விருதுநகர்

ஸ்ரீவில்லி.யில் தொடா் மழை: வெங்காயத்தில் அழுகல் நோயால் விவசாயிகள் கவலை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விவசாய நிலங்களில் மழை நீா் அதிகளவில் தேங்கி வெங்காயத்தில் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள பிள்ளையாா்நத்தம், பூவாணி, மேலதொட்டியபட்டி பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனா். அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் ‘நிவா்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக இப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பயிரிடப்பட்ட நிலங்களில் மழைநீா் அதிகளவில் தேங்கியுள்ளதால் வெங்காயச் செடிகள் முழுவதும் அழுகல் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியது: ஏக்கா் ஒன்றுக்கு சுமாா் ஒரு லட்சம் வீதம் செலவிட்டு வெங்காயத்தை பயிரிட்டு, இன்னும் 10 அல்லது 20 நாள்களில் அறுவடை செய்ய தயாா் நிலையில் இருந்தது. தற்போது மழை நீா் தேங்கியுள்ளதால் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT