முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2431 வழக்குகளுக்கு தீா்வு

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 2431 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
மாயகிருஷ்ணனிடம் இழப்பீட்டு தொகையை சனிக்கிழமை வழங்கிய முதன்மை மாவட்ட நீதிபதி ஆ. முத்துசாரதா.
பகிர்:

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 2431 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் நிலுவயில் உள்ள 3 ஆயிரத்து 470 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் சுமாா் 2431 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு அதில் 5 கோடியே 72 லட்சத்து 90 ஆயிரத்து 775 ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

மேலும் விபத்தில் சிக்கி கை, கால் செயல்படாத நிலையில் இருக்கும் மாயகிருஷ்ணன் என்பவருக்கு ரூ. 15.50 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி ஆ. முத்துசாரதா நீதிமன்ற அறையில் இருந்து வெளியே வந்து ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு சென்று நேரில் வழங்கினாா்.

இதில் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலாளா் மாரியப்பன், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவா் அமா்வு நீதிபதி ஸ்ரீதரன் மற்றும் நீதிபதிகள், அரசு எலும்பு முறிவு மருத்துவா் சுரேஷ், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →