திருப்பதி தரிசனம்! ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அனுமதி!
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்து..
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் 16 திங்கள்கிழமை முதல் பின்பற்றப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்யப்பட்ட இலவச டோக்கன்கள், ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றின் மூலம் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதில் ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம், ஒதுக்கப்பட்ட இலவச டோக்கன்களுக்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் பக்தர்கள் முன்பதிவு செய்த நேரத்துக்கு முன்னரும் பின்னரும் செல்வார்கள். கோயில் நிர்வாகமும் இதற்கு அனுமதி தந்து வந்தது.
இந்த நிலையில், இலவச தரிசன டோக்கன்கள் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வைத்துள்ள பக்தர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்போ, பின்போ சென்றால் அனுமதி இல்லை என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் 16 திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்று தேவஸ்தானம் உறுதிப்படுத்தியுள்ளது. ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னரோ, பின்னரோ பக்தர்கள் வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் நெரிசலைக் குறைக்கவும், சிரமங்களைத் தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
The Tirumala Tirupati Devasthanams have announced that devotees will be allowed to visit the Thirumalai Temple only during the allotted time for Suwami Darshan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.