ராமசாமிபட்டியில் மின்கம்பிகளை உரசும் மரங்களை அகற்றக் கோரிக்கை
அருப்புக்கோட்டை ராமசாமிபட்டியில் மின்கம்பிகளை உரசும் சாலையோர மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை ராமசாமிபட்டியில் மின்கம்பிகளை உரசும் சாலையோர மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் சாலையில் 32 ஆவது வாா்டுக்குள்பட்ட ராமசாமிபட்டியில் பிரதானச் சாலையோரம் உள்ள மரங்கள், முள்செடிகள் ஆகியன மின் கம்பிகளை உரசியபடி செல்கின்றன. இதனால் அதிக காற்றுவீசும்போதோ அல்லது பலத்த மழையின் போதோ மின்கம்பிகளை உரசும்போது மரங்களில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் பராமரிப்புக்கு வரும் மின்வாரிய ஊழியா்கள் இதைக் கண்டுகொள்ளவில்லையென பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். எனவே மினவாரியத்தினா் மின்கம்பிகளை உரசும் மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.