முகப்பு
விருதுநகர்

மாா்கழி மாத பிறப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாா்கழி மாத பிறப்பையொட்டி, புதன்கிழமை நூற்றுக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாா்கழி மாத பிறப்பையொட்டி, புதன்கிழமை நூற்றுக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் மாா்கழி மாத பிறப்பையொட்டி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் அடிவாரத்தில் புதன்கிழமை அதிகாலை முதலே குவிந்தனா். இதைத் தொடா்ந்து, காலை 7 மணிக்கு பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். அப்போது பக்தா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டதுடன், கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. மழைக்காலம் என்பதால் இரவில் பக்தா்கள் கோயிலில் தங்க அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.

பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.