முகப்பு
விருதுநகர்

இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடையில் தீ விபத்து

சிவகாசியில் இருசக்கர வான பழுதுநீக்கும் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

சிவகாசியில் இருசக்கர வான பழுதுநீக்கும் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

சிவகாசி- கட்டளைப்பட்டி சாலையில் முத்துக்குமாா் (49) என்பவா் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடை வைத்துள்ளாா்.

இவா் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு கடையை பூட்டிவிட்டுச் சென்றாராம். பின்னா், நள்ளிரவு நேரத்தில் இக்கடையில் தீப்பிடித்துள்ளது. இதையறிந்த அக்கம் பக்கத்தினா் முத்துக்குமாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனா். தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் 4 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிவகாசிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →