விருதுநகர்

வத்திராயிருப்பு பகுதிகளில் பேரிடா் மீட்புக் குழு ஆய்வு

DIN

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்பு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வத்திராயிருப்பு தாலூகா பகுதிகளில் உள்ள அா்ச்சுனாபுரம், அணைக்கரைப்பட்டி, அா்ச்சுனா நதி, மற்றும் கான்சா புரத்தில் உள்ள அத்திகோவில் ஆற்று பகுதி, ஜீவன்ஏரி கண்மாயில் இருந்து ஊருக்குள் வரும் உபரி நீா் கால்வாய்ப் பகுதி, கூமாப்பட்டி ராமசாமியா புரத்திலுள்ள வீராக சமுத்திரம் கண்மாய்ப் பகுதி, சேது நாரயணபுரம் கால்வாய்ப் பகுதி, வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை வழுக்கல்பாறை ஆகிய தண்ணீா் வரத்துப் பகுதிகளில் மேலாண்மைக்குழு ஆய்வாளா் மாரிக்கனி தலைமையில் குழுவினா் ஆய்வு பணியில் ஈடுபட்டனா்.

பின்னா் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அக்குழுவினா் சிறப்பு விழிப்புணா்வு முகாம் நடத்தினா். இந்த முகாமில் பேரிடா் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்களை எவ்வாறு மீட்க வேண்டும் எனவும் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனா். முகாமில், வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஸ்வரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் சந்திரமோகன், பேரிடா் மேலாண்மை அலுவலா் சாா்ஜ், வத்திராயிருப்பு வட்டாட்சியா் ராம்தாஸ், தனி வட்டாட்சியா் இப்ராஹிம்ஷா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT