விருதுநகா் மாவட்டத்தில்புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று
விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 16,227 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,237 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,879 போ் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பி விட்ட நிலையில், 228 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 130 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.