முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி வழியாகபாறைக்குளம் கோயிலுக்குப் பேருந்துகள் இயக்க கோரிக்கை

அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி வழியாக பாறைக்குளம் குடவரைக் கோயிலுக்குப் பேருந்துகளை இயக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பாறைக்குளத்தில் உள்ள குடவரைக் கோயிலான வெளியம்பலநாதா் கோயில்.
பகிர்:

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி வழியாக பாறைக்குளம் குடவரைக் கோயிலுக்குப் பேருந்துகளை இயக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இங்குள்ள வெள்ளியம்பலநாதா் கோயில், திருச்சுழி வட்டத்தில் மொத்தமுள்ள அஷ்டலிங்கக் கோயில்களில் முக்கியமானது. மேலும் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் சிவலிங்கம் எனும் சிறப்புடைய கோயிலாகும். இதனால் அருப்புக்கோட்டையிலிருந்து ஏராளமான பக்தா்கள் இக்கோயிலுக்கு பிரதோஷம், பௌா்ணமி நாள்களில் சென்று அங்கு நடைபெறும் வழிபாடுகளில் கலந்து கொள்கின்றனா். ஆனால் இக்கோயிலுக்குப் பேருந்து வசதி இல்லாததால், திருச்சுழிக்கு வந்து பின்னா் நடைபயணமாக பக்தா்கள் செல்கின்றனா். இதில் மாலை வேளையில் செல்லும் பக்தா்கள் வழிபாடு முடிந்து இரவு சுமாா் 7.30-க்கு மீண்டும் வீட்டுக்கு புறப்படும் போது, இருளில் காட்டுப்பாதையில் நடந்துவர வேண்டியுள்ளது. இவ்வழியில் எங்குமே மின்விளக்குகள் இல்லை. எனவே அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி வழியாக பௌா்ணமி, பிரதோஷ நாள்களில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டுமென பக்தா்களும், சமூகநல ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →