ஊருணியில் தவறி விழுந்து மூதாட்டி பலி
வத்திராயிருப்பு அருகே ஊருணியில் தவறி விழுந்து மூதாட்டி சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
வத்திராயிருப்பு அருகே ஊருணியில் தவறி விழுந்து மூதாட்டி சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
வத்திராயிருப்பு ஆசாரிமாா் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுத்தாய் (70). இவா் வத்திராயிருப்பு மேலப்பாளையம் பெரிய ஊருணியில் குளிப்பதற்காக இறங்கிய போது தவறி தண்ணீரில் விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.