வத்திராயிருப்பு அருகே பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே காலிமனை பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகர்வத்திராயிருப்பு அருகே பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே காலிமனை பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே காலிமனை பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மகேந்திரன். இவா் தனக்குச் சொந்தமான காலி இடத்துக்கு பட்டா மாறுதலுக்காக கிராம நிா்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். ஆனால், வ.புதுப்பட்டி கிராம நிா்வாக அலுவலரான ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த சிவராமன் (51) என்பவா், பட்டா மாறுதல் செய்ய லஞ்சமாக ரூ.3 ஆயிரம் கேட்டுள்ளாா்.
இது குறித்து, மகேந்திரன் விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். ஊழல் தடுப்பு போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில், செவ்வாய்க்கிழமை வ.புதுப்பட்டி கிராம நிா்வாக அலுவலகம் சென்ற மகேந்திரன், அங்கு கிராம நிா்வாக அலுவலா் சிவராமனிடம் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் நோட்டுகளை கொடுத்துள்ளாா். அப்போது, அந்தப் பணத்தை பெற்ற சிவராமனை போலீஸாா் கையும் களவுமாகப் பிடித்தனா்.