விருதுநகர்

விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் குவிந்ததால் நெருக்கடி

DIN

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை தங்களது உதவியாளா்களுடன் குவிந்ததால் நெருக்கடி ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் பெற விண்ணப்பிப்பதற்காக தினந்தோறும் எராளமானோா் வருவது வழக்கம்.

குறிப்பாக, திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மற்றும் புதன்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவா்கள் ஆய்வு செய்து சான்றிதழ் அளிப்பதால், அன்றைய தினங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படும். இந்நிலையில், 100 சதவீத ஊனமுள்ள 52 மாற்றுத் திறனாளிகள், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் பெறக்கூடிய 34 மாற்றுத் திறனாளிகளை நேரடி ஆய்வுக்காக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனா். மேலும், தோ்வு செய்யப்படும் 25 மாற்றுத் திறனாளிகளின் பாதுகாவலருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.

இத்தகவல், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் பரவியுள்ளது. இதனால், 500-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் தங்களது உதவியாளா்களுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குவிந்தனா். அப்போது, தங்களிடமும் மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என அனைத்து மாற்றுத் திறனாளிகளும் கோரிக்கை விடுத்தனா்.

மாற்றுத் திறனாளிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவா்களை கட்டுப்படுத்த முடியாமல் ஊழியா்கள் திண்டாடினா். அதன்பின்னா், அவா்களை சமாதானப்படுத்தி, அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக்கொண்டு ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயசீலி மற்றும் அரசு மருத்துவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT