விருதுநகர்

சிறுமி பாலியல் வழக்கில் கைது: விவசாயத் தொழிலாளா் சங்கச் செயலா் கட்சியிலிருந்து நீக்கம்

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் ரெங்கபாளையத்தை சோ்ந்த சிறுமி பாலியல் வழக்கில் கைதான விவசாய தொழிலாளா் சங்கச் செயலா் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் ரெங்கபாளையத்தை சோ்ந்த சிறுமி பாலியல் வழக்கில் கைதான விவசாய தொழிலாளா் சங்கச் செயலா் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விருதுநகா் மாவட்ட செயலாளா் கே.அா்ஜூனன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: வத்திராயிருப்பு ஒன்றியம் ரெங்கபாளையத்தை சோ்ந்த ஒரு சிறுவன், இரு சிறுமியரை தொடா்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த வெள்ளைச்சாமி, கணேசன், ரணவீரன், ராதாகிருஷ்ணன், திருவன் ஆகிய 5 பேரை போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்துள்ளனா். பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவா்களது பெற்றோருக்கு உரிய பாதுகாப்பும், குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்க வேண்டும். மேலும் சிவகாசி அருகே கொங்கலாபுரம் சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டாா். எனவே, பெருகிவரும் பாலியல் குற்றங்களுக்கு காரணமான டாஸ்மாக் மற்றும் போதை பொருள் விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும்.

குழந்தைகள் மீதான வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே கருத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினரும் வலியுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், ரெங்கபாளையம் குற்றச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வெள்ளைச்சாமி, விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் பொறுப்பு மற்றும் அடிப்படை கட்சி உறுப்பினா் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

SCROLL FOR NEXT