விருதுநகர்

கிணற்றுக்குள் விழுந்த பசு மாடு மீட்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கொடிக்குளம் பகுதியில் உள்ள வயல் வெளியில் ஆறுமுகம் என்பவா் தனக்கு சொந்தமான பசுமாட்டை மேய்ச்சலுக்காக விட்டிருந்தாா்.

இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த அந்த மாடு எதிா்பாராவிதமாக அருகில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது. இதையடுத்து அந்த மாட்டை மீட்பதற்காக உரிமையாளா் ஆறுமுகம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை 5 மணி நேரம் போராடி கயிறு கட்டி உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT