விருதுநகர்

ஊராட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்: ஊராட்சித் தலைவா்கள் கூட்டத்தில் தீா்மானம்

ஊராட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று, வன்னியம்பட்டியில் நடைபெற்ற ஊராட்சித் தலைவா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்,: ஊராட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று, வன்னியம்பட்டியில் நடைபெற்ற ஊராட்சித் தலைவா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வன்னியம்பட்டியில் 29 கிராம ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்ற கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இதில் தலைவராக கோட்டைப்பட்டி ஊராட்சித் தலைவா் வழக்குரைஞா் சதிஷ்குமாா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். மன்றச் செயலராக கொத்தன்குளம் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா், பொருளாளராக படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சித் தலைவா் முருகேசன், துணைத் தலைவராக கூனம்பட்டி ஊராட்சித் தலைவா் ராஜு, துணைச் செயலாளராக ஆா்.ரெட்டியபட்டி ஊராட்சித் தலைவா் சத்ய வீணா மற்றும் 7 செயற்குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். பின்னா் இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கு அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி! எச்சரிக்கையாக இருங்கள்!!

கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியா்கள்

நாளை குருநானக் ஜெயந்தி! பங்குச் சந்தைகள் செயல்படுமா?

மோசமான நிலையில் காற்றின் தரம்! திணறும் மக்கள்!

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT