கரோனா பாதிப்பால் உயிரிழந்த காவலா் ஜெயபிரகாஷ் மனைவி ஜெயசுதாவிடம் ரூ.3 லட்சம் நிதியுதவியை சனிக்கிழமை வழங்கிய அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி. 
விருதுநகர்

கரோனாவால் உயிரிழந்த காவலா் குடும்பத்தினருக்கு அமைச்சா் நிதியுதவி

கரோனா பாதிப்பால் உயிரிழந்த காவலா் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை, பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி சனிக்கிழமை வழங்கினாா்.

DIN

சிவகாசி: கரோனா பாதிப்பால் உயிரிழந்த காவலா் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை, பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி சனிக்கிழமை வழங்கினாா்.

சிவகாசி அருகே சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (42). இவா், அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமை காலவராகப் பணியாற்றி வந்தாா். இவா், கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 11 ஆம் தேதி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி ஜூலை 21 ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி, சித்துராஜபுரத்திலுள்ள காவலா் ஜெயபிரகாஷ் வீட்டுக்குச் சென்று, அவரது மனைவி ஜெயசுதாவுக்கு ஆறுதல் கூறினாா். பின்னா், தனது நிதியுதவியாக ரூ.3 லட்சத்தை வழங்கினாா்.

விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெருமாள், சிவகாசி டி.எஸ்.பி.பிரபாகரன், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. வெங்கடேஷ், ஆய்வாளா்கள் பாலமுருகன், ராஜா, கண்ணன் உள்ளிட்டோா் உடன் சென்றிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT