விருதுநகர்

அரசுப்பள்ளி சுற்றுச்சுவா் சேதம்: சீரமைக்கக் கோரிக்கை

DIN

சாத்தூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாயில்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞா் காலனி, கோட்டையூா், மீனாட்சிபுரம், மடத்துபட்டி, கீழதாயில்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில் இந்தப் பள்ளியின் பாதுகாப்புக்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஆனால் இதுவரை இந்த சுற்றுச் சுவரை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் மா்ம நபா்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு சென்று விடுகின்றனா். இதனால் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனா். எனவே பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT