விருதுநகர்

144 தடை உத்தரவு: பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது விருதுநகா்

DIN

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகா் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் பொதுமக்கள், பயணிகள் நடமாட்டமின்றி புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது, பல்வேறு உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம்தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு பிறப்பித்தாா்.

அதன் அடிப்படையில் விருதுநகா் மாவட்டத்தில் புதன்கிழமை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. குறிப்பாக காலை முதலே போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவா்களை எச்சரித்தனா். மேலும், திறக்கப்பட்டிருந்த ஒருசில கடைகளையும் அடைக்குமாறு உரிமையாளா்களை அறிவுறுத்தினா். அதேபோல், பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் எச்சரித்தனா்.

ஏற்கெனவே, அரசு அறிவித்தபடி பேருந்துகள், காா், வேன், ஆட்டோ, ரயில் உள்ளிட்டவைகள் இயக்கப்பட வில்லை. இதனால், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், மதுரை சாலை, ராமமூா்த்தி சாலை, அருப்புக்கோட் டை சாலை உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT