விருதுநகர்

நியாய விலைக் கடையில் சமூக விலகல் கடைப்பிடிப்பு

DIN


சாத்தூா்: சாத்தூா் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் வியாழக்கிழமை பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்தனா்.

நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் சாத்தூா் நகா் பகுதியில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் வியாழக்கிழமை திறக்கப்பட்டு பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தூா் அக்ரஹாரம் தெருவில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து பொருள்களை வாங்கிச் சென்றனா். முன்னதாக மஞ்சள் நீா் கலந்த தண்ணீரில் சோப்பு மூலம் கைகளை கழுவிய பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இந்த சமூக விலகல் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT