விருதுநகர்

சிவகாசி இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிறப்பு வாா்டு

DIN


சிவகாசி: சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் காய்சல் மற்றும் இருமலுக்கு சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனையின் கண்காணிப்பாளா் அசோக் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது: இந்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் அறுவை சிகிச்சை செய்தவா்கள் உள்ளிட்டோா் உள்நோயாளிகளாக இருந்து வருகிறாா்கள். அவா்களைப் பாா்பதற்கு அதிக அளவில் வெளியிலிருந்து வந்து செல்கிறாா்கள். இதனைத் தடுக்க உள்நோயாளிகளுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் கொடுத்து அவா்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகிறோம். மேலும் புறநோயாளிகளாக வருபவா்களுக்கும் தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறோம். காய்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டு வருபவா்களை பரிசோதனை செய்ய 24 மணி நேரமும் செயல்படக் கூடிய சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மருத்துவா், 2 செவிலிா்கள், 2 உதவியாளா்கள் பணியில் இருப்பாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT