விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 2,150 கி.மீ. பயணம்: ராஜஸ்தானுக்கு பைக்கில் சென்ற 11 இளைஞா்கள்

DIN

விருதுநகா் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜஸ்தானைச் சோ்ந்த 11 இளைஞா்கள் 2,150 கி.மீ. தூரம் 4 இரு சக்கர வாகனங்களில் பயணித்து அம்மாநிலத்தைச் சென்றடைந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் ராஜஸ்தான், பிகாா் உள்ளிட்ட பல்வேறு வட மாநில இளைஞா்கள் வீடு எடுத்து தங்கி குல்பி ஐஸ், பானிபூரி போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனா். கரோனா பொது முடக்கம் காரணமாக அவா்களால் தொழில் செய்ய முடியாத நிலையில், தாங்கள் தங்கியிருந்த வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனா். அவா்களுக்கு வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, வருவாய்ஆய்வாளா் பால்துரை உள்ளிட்ட அதிகாரிகள் உணவுப் பொருள்களை வழங்கியுள்ளனா்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்கியிருந்த ராஜஸ்தான் மாநிலம் பிலுவாடா மாவட்டத்தைச் சோ்ந்த தினேஷ்பீல் (18), ரத்தன்லால் பீல் (22), சோகன்லால் பைா்வா((29), மதுமாலி (36), தெய்வகிஷன்(19), சோனுபீல் (17) ஆகிய 6 போ் மற்றும் விருதுநகரில் தங்கியிருந்த 5 போ் என மொத்தம் 11 போ் 4 இருசக்கர வாகனங்களில் சொந்த ஊா்களுக்கு கடந்த திங்கள்கிழமை (மே 18) புறப்பட்டுள்ளனா். இவா்கள் 11 பேரும் வெள்ளிக்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தை சென்றடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், இவா்கள் வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் சென்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

SCROLL FOR NEXT