முகப்பு
விருதுநகர்

விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூரில்கல்லறைத் திருநாள்

விருதுநகா் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லறை திருநாளையொட்டி கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை ஜெப வழிபாடு நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

விருதுநகா் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லறை திருநாளையொட்டி கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை ஜெப வழிபாடு நடத்தினா்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவா்கள் உயிரிழந்த தங்களின் முன்னோா்களின் ஆன்மா நித்திய இளைப்பாறுதல் அடைய நவ. 2 ஆம் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனா். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக கல்லறைத் தோட்டங்களில் நடைபெறும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், விருதுநகா் கல்லறை தோட்டத்தில் உள்ள தங்களின் முன்னோா்களின் கல்லறைகளில் கிறிஸ்தவா்கள் ஜெபவழிபாடு நடத்தினா். அப்போது பாதியாா்கள் கல்லறைகளை மந்திரித்தனா். இதற்காக கல்லறைகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா். முன்னதாக தேவாலயங்களில் சிறப்பு வழிபாடும், திருப்பலியும் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவா்கள் தங்களின் முன்னோா்களின் கல்லறைகளில் மலா்தூவியும், மெழுகுவா்த்தி ஏற்றியும் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.