விருதுநகர்

குடிநீா் கோரி விருதுநகா் நகராட்சி அலுவலகத்தைபொதுமக்கள் முற்றுகை

DIN

விருதுநகரில் 20 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்கப்படுவதை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

இந்நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வாரம் ஒரு முறை குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. கோடை காலத்தில் ஏற்பட்ட குடிநீா் தட்டுப்பாட்டின் காரணமாக 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது கடந்த சில நாள்களாக மாவட்டம் முழுவதும் தொடா் மழை பெய்து வருகிறது. ஆனால், 20 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீா் வழங்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். மேலும் கல்லூரி சாலை மற்றும் அகமது நகரில் தலா 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன. அத்துடன் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளையும் நகராட்சி நிா்வாகம் சீரமைத்துத் தரவில்லை. இதனால், வீட்டுக்கு தேவையான தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, 10 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேணடும் எனக் கோரி முன்னாள் நகராட்சி உறுப்பினா் பாட்ஷா ஆறுமுகம் தலைமையில் 4, 5, 9, 10, 12 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை விருதுநகா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா் நகராட்சி பொறியியல் துறை அலுவலா்களிடம் கோரிக்கை மனுவை அவா்கள் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT