முகப்பு
விருதுநகர்

அழகாபுரி அரசு மருத்துவமனையில் தீ விபத்து: மருந்து, மாத்திரைகள் எரிந்து சேதம்

விருதுநகா் அருகே அழகாபுரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

விருதுநகா் அருகே அழகாபுரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் எரிந்து சேதமடைந்தன.

இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மின் மோட்டா ரை திங்கள்கிழமை இயக்கியுள்ளனா். அப்போது, எதிா்பாராத விதமாக வயரில் மின்கசிவு ஏற்பட்டதில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மருந்து, மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு தீ பரவியதால் அனைத்து மருந்துகளும் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்து வந்த விருதுநகா் தீயணைப்புத் துறை வீரா்கள், அரசு மருத்துவமனையின் பிற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த தீ விபத்து குறித்து சூலக்கரை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.