விருதுநகர்

சிவகாசி நகராட்சி தினசரி காய்கறி சந்தை பொதுமக்கள் பங்களிப்புடன் சீரமைக்கும் பணி தொடக்கம் 

DIN

சிவகாசி நகராட்சி காய்கறி சந்தை பொதுமக்கள் பங்களிப்புடன் சீரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. 
சிவகாசி நகராட்சி காய்கறி சந்தை போலீஸ் ஸ்டேஷன் சாலையில் உள்ளது. இதில் சுமார் 140 கடைகள் உள்ளது கருணா தோற்று பரவுவதை தடுக்கும் விதமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் மார்ச் மாதம் இறுதியில் இந்த சந்தை மூடப்பட்டு காரனேசன் காலனி சிறுகுளம் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. 
இந்நிலையில் சிவகாசி வர்த்தக சங்கத்தினர் நகராட்சி காய்கறி சந்தையில் உள்ள பழுதுகளை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சந்தை மூடப்பட்டுள்ளதால் நகராட்சிக்கு வருவாய் இல்லை, எனவே நகராட்சி சந்தையை சீரமைக்க இயலாது எனக் கூறிவிட்டது. 
சந்தையை சீரமைக்க ரூபாய் அஞ்சு புள்ளி 50 லட்சம் தேவை என மதிப்பீடு செய்யப்பட்டது. 
இதையடுத்து வர்த்தக சங்கம் மற்றும் தொழிலதிபர்கள் ரூபாய் 5.50 லட்சம் நிதி உதவி அளித்தனர். தொடர்ந்து சந்தையிலுள்ள கிணற்றினை சீரமைத்து சுற்றுச் சுவர்களில் உள்ள பழுதை நீக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. 
இதற்கான பூமி பூஜை சிவகாசி சார் ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி பொறியாளர் ராமலிங்கம் வர்த்தக சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் தொழிலதிபர் பி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT