விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில்மேலும் 35 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 35 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

DIN

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 35 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 14,556 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூா், திருச்சுழி, காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 35 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இவா்கள் அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம், மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,591 ஆக உயா்ந்துள்ளது. இதில், 14,374 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். மீதமுள்ள 217 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

SCROLL FOR NEXT